தஞ்சை: அமெரிக்காவிலிருந்து துணைமுதல்வர் ஓபிஎஸ் தமிழகம் வந்த பிறகு அதிமுகவில் இணைவேன் என அமமுகவின் முன்னாள் நிர்வாகி வ. புகழேந்தி தெரிவித்தார். அமமுகவின் பொதுச் செயலாளர் தினகரனுக்கு அக்கட்சியின் செய்தித் தொடர்பாளராக இருந்த புகழேந்திக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதனால் ஒருவரை ஒருவர் விமர்சனம் செய்து கொண்டனர். இதையடுத்து அமமுகவின் நிர்வாகிகள் அடங்கிய பட்டியலில் செய்தித் தொடர்பாளராக இருந்த புகழேந்தியின் பெயர் விடுபட்டிருந்தது. இதனால் புகழேந்தி அக்கட்சியிலிருந்து விலகி வேறு கட்சியில் இணைவார் என எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் அவர் சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியுடன் சந்திப்பு கூட்டம் நடத்தியது, அவர் அதிமுகவில் இணைவார் என்பதை உறுதி செய்தது.
அமெரிக்காவிலிருந்து ஓபிஎஸ் தமிழகம் வரட்டும்.. அதிமுகவில் இணைவேன்.. புகழேந்தி