திருவள்ளூர் மாவட்டம் புல்லரம்பாக்கம் பகுதியில் வசித்து வந்தவர் சிவமணி. பைனான்ஸ் தொழில் செய்கிறார். கல்யாணம் ஆகி 12 வருஷங்கள் ஆகிறது. இவர்களுக்கு 10 வயசில் ஒரு மகன் இருக்கிறான்.
இந்த நிலையில் சினேகா என்ற இளம்பெண் மீது சிவமணிக்கு காதல் வந்துவிட்டது. சினேகா அதே பகுதியில் தனியார் காலேஜில் 2-ம் வருஷம் படித்து வருகிறார். அறிமுகம் ஆன புதிதில் இருவரும் நட்பாகத்தான் பழகினார்கள். நாள் ஆக ஆகதான், பழக்கம் நெருக்கமானது.. பல இடங்களுக்கு சினேகாவை தனிமையில் அழைத்து சென்றுள்ளதாக சொல்கிறார்கள். இந்நிலையில், 3 நாட்களுக்கு முன்பு சினேகாவை காணோம். எங்கே போனார் என்று தெரியாமல் பெற்றவர்கள் பல இடங்களில் தேடி.. கடைசியில் திருவள்ளூர் மகளிர் போலீஸில் புகார் செய்தனர்.
இதையடுத்து போலீசாரும் விசாரணையில் இது எல்லாமே சிவமணி செய்த காரியம் என்பது தெரியவந்தது. சினேகாவை வேளாங்கண்ணிக்கு கடத்தி கொண்டு போய் கல்யாணமே செய்து கொண்டுவிட்டார் சிவமணி. அங்கேயே ஒரு வீட்டையும் பிடித்து குடும்பமும் நடத்த தொடங்கிவிட்டார். இதையடுத்து சிவமணியை கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே முதல் மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருப்பவர், மாணவியை கடத்தி, 2-வதாக கல்யாணம் செய்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.