பொன்னேரி சட்ட மன்ற உறுப்பினருக்கு பாசி மணி அணுவித்த நரிக்குறவர்கள்
மீஞ்சூர் மற்றும் பொன்னேரி பேரூராட்சி பகுதியில் கால்நடை மருத்துவமனையில் இன்று தமிழக அரசின் இலவச அசில் கோழி குஞ்சுகள் வழங்கும் நிகழ்ச்சி
நடைபெற்றது இதில் பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் பலராமன் கலந்து
கொண்டு 425 பயனாளிகளுக்கு கோழிகுஞ்சுகளைவழங்கினார் பின்னர் கல்பாக்கம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அரசின் விலையில்லா ஆடுகள் 112 பயனாளிகளுக்கு வழங்கினார். அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நரிக்குறவர் இன மக்களுக்கு முக்கியத்துவம் அளித்து ஆடுகள் மற்றும் கோழி குஞ்சுகள் வழங்கியதால் சட்டமன்ற உறுப்பினர் பலராமனுக்கு நரிக்குறவர் இன மக்கள் குழந்தைகளுடன் வந்து பாட்டுப்பாடி சட்டமன்ற உறுப்பினருக்கு பாசிமணி கழுத்தில் அனுவித்து நன்றி தெரிவித்து அவரை கௌரவப்படுத்தினர்..