டிஜிட்டல் மயமாகும் தமிழக சட்டசபை

சென்னை : 



தமிழக சட்டசபை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படுகிறது. இதையொட்டி எம்.எல்.ஏ.க்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிய டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், இந்தியாவில் உள்ள அனைத்து சட்டமன்றங்கள், பாராளுமன்றம் மற்றும் டெல்லி மேல்-சபை ஆகியவற்றை டிஜிட்டல் மயமாக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக பாராளுமன்ற விவகாரங்கள் துறை, தேசிய இ-விதான் என்ற திட்டத்தைத் தொடங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின்படி, சட்டசபைகளில் பேப்பர்களின் பயன்பாடு பெருமளவில் குறைக்கப்படும்.
இ-விதான் திட்டம் நடைமுறைக்கு வந்ததும், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்களுக்கு அளிக்கப்பட வேண்டிய தகவல்கள் அனைத்தும் டிஜிட்டல் வழியில் அளிக்கப்படும். இ-விதான் இணையதளத்திலும் பாராளுமன்றம், டெல்லி மேல்- சபை உள்பட அனைத்து சட்டமன்றங்களும் இணைக்கப்பட்டு இருக்கும்.
அதில், எம்.எல்.ஏ.க்கள் தனியாக லாக்-இன் செய்து கொள்ள முடியும். அந்த லாக்-இன்-ல் அவர்களுக்கு சட்டசபை செயலகம் மூலம் தகவல்கள், நோட்டீஸ்கள், சட்டசபை நிகழ்ச்சிகள் அளிக்கப்படும். அவர்களும் அந்த தளத்தின் வழியாக பதிலளிக்க வேண்டும்.
சட்டசபை நிகழ்ச்சிகளை நேரடி ஒளிபரப்பு செய்ய சபாநாயகர் முடிவு செய்தால், அதையும் இ-விதான் வழியாக ஒளிபரப்பு செய்யலாம். தற்போது இமாசல பிரதேச சட்டசபை முழுமையாக இ-விதான் திட்டத்தை செயல்படுத்துகிறது.
தமிழக சட்டசபையில் இதை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை சட்டசபை செயலகம் தீவிரமாக எடுத்து வருகிறது. இதையொட்டி அதிகாரிகள், அலுவலர்களுக்கு சட்டசபை குழு கூட்ட அறையில் இன்று பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டது. இதை சபாநாயகர் ப.தனபால் தொடங்கி வைத்தார்.
தமிழக சட்டசபை அலுவலர்களுக்கு அடுத்தகட்ட பயிற்சி டெல்லியில் நடத்தப்பட உள்ளது. இ-விதான் திட்டத்தை பயன்படுத்தும் முறை பற்றி பின்னர் எம்.எல்.ஏ.க் களுக்கும் சிறப்புப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
தமிழக சட்டசபையில் இந்தத் திட்டத்தை அமல்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை என்.ஐ.சி. தயாரித்துள்ளது.
இந்தத் திட்டம் அமலுக்கு வந்த பிறகு, சட்டசபையில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் விவாதங்களையும் உடனடியாக பதிவேற்றம் செய்ய வாய்ப்புள்ளது.
இதற்காக எம்.எல்.ஏ.க்களுக்கு கையடக்க லேப்- டாப் வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.


Popular posts
60 தட்கல் ஏஜெண்டுகள் கைது - சட்டவிரோத மென்பொருளை பயன்படுத்தி டிக்கெட் விற்றவர்கள்
Image
பொன்னேரி சட்ட மன்ற உறுப்பினருக்கு பாசி மணி அணுவித்த நரிக்குறவர்கள்
Image
44 வயது பைனான்சியரின் 19 வயது காதல் மனைவி - முதல் மனைவி போலீசில் புகார்
வாணியம்பாடியில் பெண் ஆய்வாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று PCR டெஸ்ட் மூலம் கண்டறியப்பட்டுள்ளது இதனால் அந்த காவல் நிலைத்தில் பணிபுரிய உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களை தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு காவல் நிலையும் பூட்டப்பட்டது
Image
சிதம்பரம் நகர விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கீழமூங்கிலடி யில் வீடு வீடாக சென்று காய்கறிகள் வழங்கினார்
Image