" alt="" aria-hidden="true" />
மராட்டிய முதல்-மந்திரியும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரே மற்றும் ஆதித்யா தாக்கரே ஆகியோர் மத்திய உள்துறை-மந்திரி அமித் ஷாவை இன்று நேரில் சந்தித்தனர்.
முன்னதாக பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி உள்ளிட்டோரை உத்தவ் தாக்கரே இன்று டெல்லியில் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். இதனிடையே பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய உத்தவ் தாக்கரே, “மராட்டிய மாநிலம் தொடர்பாக பல்வேறு பிரச்சினைகள் குறித்து மோடியுடன் ஆலோசனை நடத்தினோம். அதேபோல் சி.ஏ.ஏ., என்.பி.ஆர். மற்றும் என்.ஆர்.சி. குறித்தும் மோடியுடன் விவாதித்தோம். சி.ஏ.ஏ. குறித்து யாரும் அச்சப்பட தேவையில்லை. என்.பி.ஆர். என்பது நாடு முழுவதும் அமல்படுத்தப்படபோவது இல்லை. மராட்டிய கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. நாங்கள் 5 ஆண்டுகாலம் ஆட்சியை நிறைவு செய்வோம்” என்று கூறினார்