வேப்பூர் அக்கா மகனை வெளிநாடு அனுப்ப இருசக்கர வாகனத்தில் வந்த தாய்மாமன் பலி

அக்கா மகனை வெளிநாடு அனுப்ப இருசக்கர வாகனத்தில் வந்த தாய்மாமன் பலி  

வேப்பூர் பஸ் நிலையம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் பலியானார்  

கள்ளக்குறிச்சி மாவட்டம் கூத்தக்குடி அண்ணா நகர் பகுதியை  சேர்ந்த ஆறுமுகம் மகன் வேலாயுதம் (வயது 43),  இவரது அக்கா மகன் பெரிய சிறுவத்தூரை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மணிகண்டன் இருவரும் கூத்தக்குடியிலிருந்து வேப்பூர் பஸ் நிலைத்திற்கு இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தனர்  , வாகனத்தை மணிகண்டன் ஓட்ட வேலாயுதம் பின்னால் உட்கார்ந்திருந்தார் இதில் மணிகண்டன் வெளிநாடு செல்ல வேப்பூரிலிருந்து சென்னை செல்லும் பேருந்தில் ஏற்றி  அவரை வழி அனுப்ப வந்தவர் தாய்மாமன்  வேலாயுதம்  வேலாயுதம் தன் மடியில் வைத்திருந்த டிராவல் பேக் கீழே விழுந்தபோது தாவி எடுக்க முயற்சி செய்த போது தவறி கீழே விழுந்துள்ளார் அதில் வண்டியை ஓட்டி வந்த மணுகண்டனும் விழுந்துள்ளார்  இதில் பலத்த காயமடைந்தவர்களை நெடுஞ்சாலைதுறை  ஆம்புலன்சில் ஏற்றி வேப்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் வேலாயுதம் இறந்துவிட்டார், மணிகண்டன் காயங்களுடன் வேப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இது குறித்து தகவலறிந்த இன்ஸ்பெக்டர் கவிதா, எஸ்ஐ, சக்திகணேஷ், சிறப்பு எஸ்ஐ, கலியமூர்த்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து பிரேத பரிசோதனைக்காக வேலாயுதம் உடலை விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் அக்கா மகனை வெளிநாடு அனுப்ப வந்த தாய்மாமன் பலியானது அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 


Popular posts
60 தட்கல் ஏஜெண்டுகள் கைது - சட்டவிரோத மென்பொருளை பயன்படுத்தி டிக்கெட் விற்றவர்கள்
Image
பொன்னேரி சட்ட மன்ற உறுப்பினருக்கு பாசி மணி அணுவித்த நரிக்குறவர்கள்
Image
44 வயது பைனான்சியரின் 19 வயது காதல் மனைவி - முதல் மனைவி போலீசில் புகார்
வாணியம்பாடியில் பெண் ஆய்வாளருக்கு கொரோனா வைரஸ் தொற்று PCR டெஸ்ட் மூலம் கண்டறியப்பட்டுள்ளது இதனால் அந்த காவல் நிலைத்தில் பணிபுரிய உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்களை தனிமைப்படுத்த மாவட்ட நிர்வாகம் முடிவு காவல் நிலையும் பூட்டப்பட்டது
Image
சிதம்பரம் நகர விஜய் மக்கள் இயக்கம் சார்பாக கீழமூங்கிலடி யில் வீடு வீடாக சென்று காய்கறிகள் வழங்கினார்
Image